நல்வரவு

சேவிக்கும் உள்ளங்களை விட உதவும் கரங்களே மேல்

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.

>> வியாழன், 2 செப்டம்பர், 2010


கடந்த ஆகஸ்ட் 24 அன்று நமது தொழில்நுட்ப பதிவர் "விண்மணி" அவர்களின் பதிவான

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம். பதிவை எங்கள் அலுவலகத்தில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபொழுது, எங்க போனாலும் ஒரு அக்கப்போர் ஒன்னு இருக்கும் இல்ல அதுபோல நமது நண்பர் அரவிந்த் அந்த OSK விசைகள் (keys) வேலை செய்யலைன்னா என்ன செய்வீங்க? அப்பிடீன்னு கேட்டாரு.

கேள்வி நல்ல கேள்விதான். பதில்  சொல்லணும் இல்ல.
அதான் நமக்கு தெரிஞ்சத அவருக்கும் சொல்லி ஒரு பதிவாவும் போட்டா நாலு பேருக்கு பயண்படலாமே அப்பிடீன்னுதான்.
விசைப்பலகையில உள்ள விசைகள் எல்லாமெ ஒரு ஆஸ்கி (ascii - American standard code for information interchange) மதிப்புலதான் வேலை செய்யுது. அதன் படி ஒவ்வொரு ஆஸ்கி மதிப்புக்கும் ஒரு விசை வேலை செய்யும். 255 விசைகள் இப்படி விசப்பலகையில் உள்ளீடா அமைக்கப்பட்டிருக்கு. எண் வரிசப்படி ஒவ்வொரு எண்ணும் ஒரு ஆஸ்கியோட இணைந்து அதன் வெளியீடா நம்ம விசப்பலகை மூலம் வெளிபாடுது. அந்த வகையிலதான்
கீழே இருக்க அட்டவணையும் இருக்கு
உபயொகப்படுத்திப்பாருங்க.... பயனுள்ளதாஇருக்கும்னு நம்புவோம்.

Press ALT + below key for 





Key
Value
Key
Value
65
A
97
a
66
B
98
b
67
C
99
c
68
D
100
d
69
E
101
e
70
F
102
f
71
G
103
g
72
H
104
h
73
I
105
i
74
J
106
j
75
K
107
k
76
L
108
l
77
M
109
m
78
N
110
n
79
O
111
o
80
P
112
p
81
Q
113
q
82
R
114
r
83
S
115
s
84
T
116
t
85
U
117
u
86
V
118
v
87
W
119
w
88
X
120
x
89
Y
121
y
90
Z
122
z
இல்லைனா, ரன் பெட்டியில charmap ன்னு அடிச்சா கணிணியில உள்ள அனத்து எழுத்துருவோடவும் ஒரு பெட்டி உதவிக்கு வரும்.
இப்பிடி ஒரு மின்னஞ்சல அனுப்பிடவுடனே,இன்னொரு நண்பர் கார்த்த்க்ராஜ சொன்னது
இனிமேல் யாரும் விசைப்பலகை வேலை செய்யவில்லை என்று வேலையை தள்ளிப் போட முடியாது, வேலைசெய்ய முடியவில்லை என்று செந்திலை தொந்தரவும் செய்ய முடியாது

Read more...

தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா

>> ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010


தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைத் தஞ்சையில் செப்டம்பர் 25,26-ம் தேதிகளில் நடத்துவது என முடிவு செய்திருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது.

சுற்றிலும் கற்களோ , மலைகளோ  இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது.இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை?

தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா!

தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.

எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?
தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

ராஜராஜ சோழன் குறித்தும்,அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!

தகவல் உதவி : தினமணி
                                     Wikkipedia 
                                    http://www.thebigtemple.com/templetimeline.html


Read more...

என்னைபற்றி

எனது புகைப்படம்
வந்தாரை வாழ்வைக்கும் தமிழ்மண்ணிலே ஊர் விட்டு ஊர் புலம் பெயரும்பலகோடி தமிழர்களில் நானும் ஒருவன். முதுகலை நிர்வாகவியல் - கணிப்பொறியியல் எனது கல்வி தகுதி.

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP